Home புதினங்களின் சங்கமம் கிளிநொச்சி யுவதி வன்கொடுமை! 17 வயது காவாலி உட்பட 3 பேர் போதைப் பொருள் பாவித்தபின்...

கிளிநொச்சி யுவதி வன்கொடுமை! 17 வயது காவாலி உட்பட 3 பேர் போதைப் பொருள் பாவித்தபின் கெடுத்தது மருத்துவ பரிசோதனையில் உறுதி!

கிளிநொச்சி – சாந்தபுரத்தில் கொடூரம்:

26 வயது யுவதி பாலியல் வன்கொடுமை!
17 வயது சிறுவன் உட்பட மூவர் சிக்கினர்!!

– சந்தேகநபர்கள் போதைப்பொருள் பாவித்துள்ளமை மருத்துவ பரிசோதனையில் உறுதி

கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியில் 26 வயதுடைய இளம் யுவதி ஒருவர் மீது நேற்று திங்கட்கிழமை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை புரிந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் முறையே 17, 18 மற்றும் 20 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொடூர சம்பவத்துடன் தொடர்புடைய மூவரில் 17 வயதுடைய சிறுவன் ஒருவனும் உள்ளடங்குகின்றமை பாரிய அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் இன்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்தச் சோதனைகளின் போது, சந்தேகநபர்கள் மூவரும் கஞ்சா மற்றும் ஐஸ் உள்ளிட்ட ஆபத்தான போதைப்பொருள்களைப் பயன்படுத்தியிருந்தமை மருத்துவ பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பாலியல் அத்துமீறல் சம்பவத்தில் காயமடைந்த 26 வயதுடைய யுவதி சிகிச்சைக்காகக் கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, கைது செய்யப்பட்ட 17 வயதுச் சிறுவன் உட்பட மூன்று சந்தேகநபர்களையும் இன்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய ஏற்பாடுகளைக் கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments