லண்டன் கொஸ்கோவில் களவு போகும் தமிழர்களின் சிகரெட்: 7,000 பவுண்டுகள் செக்கனில் மாயம்
லண்டனிலும் புறநகர் பகுதிகளிலும் உள்ள பல, கொஸ்கோ(Costco) மொத்த கொள்வனவு நிலையங்களில் தமிழர்களின் சிகரெட்டுகள் களவாடப்பட்டு வருகிறது. இது இன்று நேற்று மட்டும் அல்ல பல ஆண்டுகளாக இடம்பெற்று வருகிறது. 2016ம் ஆண்டில் மட்டும் இச்சம்பவம் 3 முறையும், அதனை தொடர்ந்து 2017 , 2018 மற்றும் 2019 என்று இச்சம்பவங்கள் தொடர்சியாக இடம்பெற்று வந்த நிலையில். 2020 ஜனவரி மாதத்திலும் ஒரு தமிழ் கடை உரிமையாளர் 7,000 பவுண்டுகள் பெறுமதியான சிகரெட்டுகளை ஒரு நொடிப் பொழுதில் இழந்துள்ளார். இது எப்படி நடக்கிறது என்பதனை சற்று நிதானமாக வாசியுங்கள்.
தமிழ் கடை உரிமையாளர்கள் பலர் கொஸ்கோ செல்வது வழக்கம். அவர்கள் வாங்கும் அன்றாட விற்பனை பொருட்களை வாகனத்தின் பின்னால் வைப்பதும். விலை மதிப்பான சிகரெட்டுகளை வாகனத்தில் தமக்கு அருகே(முன்னால்) வைப்பதும் வழக்கம். இதனை நன்றாக அவதானித்து வரும் ஒரு கும்பல், ஒரு முதலாளியை குறிவைக்கிறார்கள். அவர் கார் பார்கில் வந்து தமது வேனில் ஏறிய பின்னர். ஒருவர் சென்று வேன் பின் கதவை திறக்க முயற்ச்சி செய்வது போல பாசாங்கு செய்ய. என்ன சத்தம் கேட்க்கிறது என்று பார்க்க கடை உரிமையாளர் இறங்கிச் செல்வார்.
அந்த ஒரு செக்கனில் ஏற்கனவே முன்னால் பதுங்கி இருந்த நபர் சிகரெட் அடங்கிய பையை எடுத்துச் சென்றுவிடுவார். அவர்களுக்கு மிக மிக அருகாமையில் அவர்களது கார் இருக்கும். அவர்கள் உடனடியாக கூட கொஸ்கோ கார் பார்கில் இருந்து செல்வது இல்லை. முதலில் தமது காரில் சிகரெட்டை போட்டு மூடிவிட்டு. தாமும் ஏதோ ஷாப்பிங் செய்ய வந்தவர்கள் போல நடித்துக் கொண்டு இருப்பார்கள். இதனால் கள்வர் யார் என்பதனை நீங்கள் கண்டு அறிய முடியாது. இதே பாணியில் தான் கொள்ளை நடந்து வருகிறது. ஆனால் இதில் ஒரு விடையத்தை நாம் கவனிக்க வேண்டும். இவர்கள் இது நாள் வரை கொள்ளையிட்ட சிகரெட்டுகள் எதுவும் 5,000 பவுண்டுகளுக்கு குறைவானது அல்ல. எனவே உள்ளே வேலை பார்க்கும் யாரோ, இந்த கொள்ளையர்களுக்கு தகவல் கொடுக்கிறார்களோ என்ற சந்தேகம் உள்ளது.
பெரும்பாலும் ஒரு தமிழ் கடைக்காரர், 5,000 பவுண்டுக்கு மேல் சிகரெட் வாங்கினால் மிக மிக ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. இதேவேளை இக் கொள்ளைக் கும்பல் உங்களை தாக்கி விட்டு சிகரெட்டை எடுத்துச் செல்ல கூட தயங்க மாட்டார்கள். இது போல ஒரு கொலை வட்பேட்(Watford) கொஸ்கோவில் நடந்ததும் உங்களுக்கு நினைவிருக்கலாம். எனவே தமிழர்கள் மிக மிக ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

