புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசிபலன்கள் (05.02.2020)

மேஷம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். புது வாகனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியமாக சில முடிவுகளை எடுக்கும் நாள்.

ரிஷபம்: கணவன் – மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் இழந்த உரிமையைப் பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். நீங்கள் நகைச் சுவைக்காக சொல்ல கூடிய சில விஷயங்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

கடகம்: சில காரியத்தை முடிக்க அலைந்து திரிய வேண்டி இருக்கும். பிள்ளைகளின் உணர்வுக ளைப் புரிந்துக் கொள்வது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ளவேண்டாம். வாகனங்களால் செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப்போவது நல்லது. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

சிம்மம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபட்டு புகழ் பெறுவீர்கள். பெற்றோர் களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரி களால் பாராட்டப்படு வீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

கன்னி: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர் கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார் கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புதிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.

துலாம்: கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.

விருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடர் வதால் மன இறுக்கம் உருவாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. இனிமையாக பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகள் குறை கூறுவார். சகிப்பு தன்மை தேவைப்படும் நாள்.

தனுசு: கடினமான வேலையை சாதாரணமாக முடிப்பீர்கள். சகோ தரர்களால் ஆதாயம் உண்டு. விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை அனைத்தும் சாதகமாக முடியும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

மகரம்: எதிர்பார்ப்புகள் நிறை வேறும் எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் மேல் அதிகாரி உங்களை நம்பி சில முக்கிய முடிவுகளை எடுப்பார். அமோகமான நாள்.

கும்பம்: குடும்பத்திற்குள் உங் கள் கை ஓங்கும். சிக்கனமாக செலவழித்துச் சேமிக்கத் தொடங்குவீர் கள். நட்பு வட்டாரம் விரிவடையும். அக்கம் – பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர் கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். நினைத் தது நடக்கும் நாள்.

மீனம்: எதிர்ப்புகளை தாண்டி முன்னேறுவீர்கள். பெண்ணுக்கு நல்ல வரன் அமையும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் உதவி கிடைக்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.