பூநகரியில் சாருஜன் தம்பி செய்யும் வேலை என்ன?
பூநகரியைச் சேர்ந்த சாருஜன் தம்பிக்கு வயசு 10 அவனை கௌதாரிமுனை மணித்தலைக்கு திரும்பும் வழியில் பெரும்பாலான விடுமுறை நாட்களில் காணலாம் . அவனது தந்தை மீன்பிடித்தொழில் புரிந்துவருகின்றார் குடும்பத்தில் மொத்தமாக 12 பேர் இருக்கின்றார்கள். பாடசாலை நேரம்போக மீதிநேரம் தாயாரால் தினமும் அவிச்சு கொடுக்கும் பனங்கிழங்கை விற்று பெறும் பணத்தை தாயாரிடம் ஒப்படைக்கவேண்டும் என்பதே அவனக்கு வழங்கப்பட்டுள்ள பிரதான பணி.
….ம் ஒரு பக்கம் ரீயுசன் வீடு பள்ளிக்கூடம் என்று புறோயிலர் பிள்ளைகளை வளர்க்க மறுபக்கம் வறுமை, மனவலிமைமிக்க பிள்ளைகளை உருவாக்கிக்கொண்டு இருக்கின்றது.
பத்து பனங்கிழங்கு 100 ரூபா. கொஞ்சம் விலை அதிகம்தான் ஆனால் அந்தச்சிறுவன்ர குடும்பத்தின் ஒருநேரப் பசியினை ஆற்றுவதற்கு எம்மால் முடிந்த சிறு உதவியை செய்யமுடியும்.
இப்படியானவர்களை வீதியில் கண்டால் பேரம்பேசாமல் நம்மால் முடிந்தளவுக்கு உதவி செய்வோம்.
நன்றி
Kajananan Varunanthan


