புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசிபலன்கள் (01.02.2020)

மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வேலைச்சுமை அதிகரிக் கும். ஓய்வு எடுக்க முடியாதபடி அலைந்து திரிய வேண்டி இருக்கும். குடும்பத்தாருடன் மனக்கசப்புகள் வந்து நீங்கும். மற்றவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் பிரச்சினைகள் உருவாகும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்: உங்கள் செயல்களில் அலைச்சலும், பிரச்னைகளும், தடைகளும் வந்து நீங்கும். உடன் பிறந்தவர்களால் பிரச்சினைகள் உருவாகும். வீண் செலவுகள் வந்துபோகும். மனதில் தாழ்வு னப்பான்மை வந்து நீங்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் வாக்குவாதம் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.

மிதுனம்: கிடைக்கும் சந்தர்ப்பங்களில் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். புகழ் பெறும் நாள்.

கடகம்: உங்கள் காரியங்களில் கண்ணும் கருத்துமாக செயல் பட்டு வெற்றி பெறுவீர்கள். நண்பர்கள் உதவிக்கரமாக இருப்பார்கள். பிரியமானவர்களின் சந்திப்புநிகழும். வியாபாரத்தில் புதிய வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சில முக்கிய சூட்சமங்களை கற்றுக்கொள்வீர்கள். விடாமுயற்சியால் வெற்றி பெறும் நாள்.

சிம்மம்: கடந்த இரண்டு நாட்க ளாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஒப்பந்தங்களால் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் உயரதிகாரி கள் உதவிகரமாக இருப்பார்கள். புதிய மாற்றங் கள் ஏற்படும் நாள்.

கன்னி: சந்திராஷ்டமம் தொடங்கி இருப்பதால் எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும். குடும்ப அந்தரங்க விஷயங்களை மற்றவரிடம் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். சாலை பயணங்களில் கவனம் தேவை. உத்தியோகத் தில் மறதியால் பிரச்சினைகள் வந்து நீங்கும். வியாபாரம் மந்தமாக இருக்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

துலாம்: கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். நன்மை கிட்டும் நாள்.

விருச்சிகம்: அரசால் அனுகூலம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். வழக்கு விஷயங்கள் தீர்ப்பு சாதக மாக வரும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துகொள்வீர்கள். அமைதியான நாள்.

தனுசு: வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். பிள்ளை களால் மகிழ்ச்சி உண்டாகும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத் தில் முக்கிய விஷயங்களை கற்றுக் கொள் வீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.

மகரம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். வியாபாரத்தில் சிறிய தடைகள் வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

கும்பம்: தைரியமாகவும் துணிச்ச லாகவும் முக்கிய முடிவுகளை எடுத்து செயல்படுத்துவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிகர மாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.

மீனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். இழுபறி யாக இருந்த வேலைகள் உடனே முடியும். புதிய நண்பர்கள் வருகையால் மகிழ்ச்சி பொங்கும். நீண்டநாள் பிரச்சினைகளுக்கு எளிதாக தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தி யோகத்தில் மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள். உற்சாகமான நாள்.