பல்சுவை செய்திகள்புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

லண்டன் தமிழர்களே ஜாக்கிரதை: லண்டனுக்கும் பரவியது கொரோனா வைரஸ்

சீனாவின் வுஹான் நகரில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது லண்டனுக்கும் பரவியுள்ளது. வுஹான் நகரில் இருந்து சுமார் 200 பயணிகள் லண்டன் வந்து, பின்னர் ஸ்காட்லன் அயர்லாந்து என்று சென்றுள்ளார்கள். இதில் ஸ்காட்லானில் எடின்பர் நகரில் உள்ள மருத்துவமனையில், சந்தேகத்திற்கு இடமான சீன நாட்டவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதுபோக லண்டனில் உள்ள ஹிலிங்டன் வைத்தியசாலையில், கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான நபர் ஒருவருக்கு வைத்தியம் பார்கப்படுவதாக செய்திகள் கசிந்துள்ளது.

லண்டன் வந்த 200 பேருக்கு மத்தியில், விமானத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் ? என்பதும். அவர்களுக்கு அருகில் இருந்தவர்களுக்கு இந்த வைரஸ் தொற்றி இருக்கலாம் என்றும் தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. இது இவ்வாறு இருக்க. சுமார் 20 மில்லியன் பேர் வசிக்கும் 4 நகரங்களை சீன அரசு முற்றாக லாக்-டவுன் செய்துள்ளது. லண்டனில் சுமார் 1 லட்சத்தி 20,000 ஆயிரம் சீனர்கள் கல்வி கற்று வருகிறார்கள். தற்போது லண்டனில் உள்ள பல பல்கலைக் கழகங்கள் கூடி, இந்த கொடிய வைரஸை எப்படி கட்டுப்படுத்துவது ? எவ்வாறு சீன மக்களுக்கு உதவுவது என்று ஆராய்ந்து வருகிறார்கள்.

சீனாவின் வுஹான் நகரில் , வெளவால் சூப் விற்பனையாகி வந்துள்ளது. இந்த வெளவாலில் இருந்து தான் குறித்த கொரோனா வைரஸ் மக்களுக்கு முதலில் பரவியதாக தற்போது மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.