புதினங்களின் சங்கமம்

நிறை வெறி!! சீருடையுடன் சிறையில் அடைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்!

காலி – வதும்ப பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அலுவலகர் ஒருவர் சீருடையுடன் கைது செய்யப்பட்டு சிறைக் கூடத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் அலுவலகர் மது அருந்திவிட்டு விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையிலேயே குறித்த பொலிஸ் உத்தியோகத்தரையே சீருடையுடன் கைது செய்து பொலிஸ் நிலைய சிறைக் கூண்டில் அடைத்து வைத்துள்ளார் அந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி.

இவ்வாறான செயலை செய்தமைக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பாராட்டுக்கள் கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.