யாழில் தலைக்கவசம் இன்றி அதி வேகமாக சென்ற இளைஞன் பலி!! (Photos)
வடமராட்சி அல்வாய் கிழக்கு அத்தாயை சேரந்த இரவீந்திரன் தனுசன் (வயது_22) கடந்த செவ்வாய்க்கிழமை ( 14)அன்று மாலை அல்வாய் பகுதியில் மோட்டார் வண்டியில் அவரது உறவினர் வீட்டிற்கு சென்று தனது வீடு நோக்கி திரும்பி வரும் வழியில் அல்வாய் உள்ளூர் வீதியில் அமைந்துள்ள வளைவில் அதிவேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் வண்டி வீதியின் அருகே நின்ற மரத்துடன் மோதியுள்ளது .
தலைக்கவசம் இன்றி பயணம் செய்தமையினால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உடனடியாக மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதான வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த ஆறு நாட்கள் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை சிகிச்சை பலனின்றி இன்று காலை வைத்தியசாலையில் உயிரிழந்தார் .
அல்வாய் கிழக்கு பத்தானை பகுதியில் உள்ள சகோதரனின் பிள்ளைகளுக்கு தைப்பொங்கல் தினத்துக்கு புது உடைகள் வாங்க பணம் கொடுத்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி சென்ற சமயம் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது
சிறு வயதில் தந்தையை இழந்து தாயாரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த இவரின் இழப்பு ஊரையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

