வவுனியாவிலிருந்து பயணிகளை ஏற்றி யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பேருந்தில் (இல NB 3645 ) இருந்து கொடிகாமம் பகுதியில் சில பயணிகள் இறங்கிய போது அவர்களின் பைகள் மாறுபட்டுள்ளன.
இந்நிலையில் நடத்துனரும் பல பயணிகளும் பேருந்திலிருந்து இறங்கி பைகளை தேடிய போது அவர்களை கவனிக்காது பேருந்தின் சாரதி பேருந்தை ஓட்டி சென்றுள்ளார்,
பின்பு நீண்ட நேரத்திற்கு பின்பே பேருந்து திரும்பி வந்து இவர்களை ஏற்றி சென்றுள்ளது. இவ்வாறான அசமந்தமான சாரதிகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Home புதினங்களின் சங்கமம் யாழில் பஸ் சாரதியின் திருவிளையாடல்!! நடத்துனரும் பயணிகளும் நடுவீதியில்!! (Photos)





