புதினங்களின் சங்கமம்

கல்லடி பால பிரதேசத்தில் காணாமல் போன கிழக்கு பல்கலை மாணவனின் சடலம் மீட்பு(Photos)

கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தின் மாணவர் ஒருவர் கடந்த 9 ஆம் திகதி காணாமல்போன நிலையில் அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு மருத்துவபீடத்தில் 01ஆம் ஆண்டு கற்றுவரும் அக்கரப்பத்தனை ஹோல்புறூக் நகர பகுதியை சேர்ந்த சி.மோகன்ராஜ் என்னும் மாணவன் காணாமல்போன நிலையில் இன்று பிற்பகல் கரையாக்கன்தீவினை அண்டியுள்ள பகுதியில் குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிள்ளையாரடியில் உள்ள வளாக விடுதியில் இருந்து சென்றவர் விடுதிக்கு திரும்பாத நிலையில் மாணவர்களினால் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டது.

இதனடிப்படையில் இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவந்த நிலையில் இறுதியாக அவரது கையடக்க தொலைபேசி இணைப்பு கல்லடி பாலத்திற்கருகில் செயற்பட்டுள்ளமையினால் கல்லடி பாலம் அருகிலும் கடற்படை மற்றும் பொலிஸார் தேடுதல்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்த்தக்கது.

Image may contain: 3 people, people standing and close-upImage may contain: outdoor, nature and water