புதினங்களின் சங்கமம்

மட்டு‘வில்உடல் வலிக்கு தடவும் தைலத்தைக் குடித்த 2 வயதுப் பாலகன் பரிதாபகரமாகப் பலி!!(Photos)

கவனக்குறைவால் உடல் வலிக்கு தடவும் தைலத்தை அருந்தி ஒன்றரை வயது சிறுவன் பலியாகிய சம்பவம் கிராமமே சோகமயமானது.
வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பலாவத்தை பகுதியில் கடந்த புதன்கிழமை 1 ம் திகதி மாலை வேளை பெரியவர்கள் உடல் வலிக்கு பயன்படுத்தும் தைலத்தை அருந்தியதால் மயக்க நிலை அடைந்த சிறுவனை கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டான்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்திய சாலையில் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சைபலனிளிக்காமல் வெள்ளிக்கிழமை(3) இரவு உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தது.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹரிகரன் துசேன் எனும் 1 வயதும் 8 மாதமுடைய சிறுவனே மரணமடைந்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் தம்பலாவத்தை பிரதேசத்தை சேர்ந்த குறித்த சிறுவனின் தந்தை பணி நிமிர்த்தம் வளைகுடா நாடுஒன்றில் பணி புரிந்து வருகின்றார் .

சிறுவனின் தாயார் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை அன்றைய தினம் உறவினர்களின் பராமரிப்பில் இருந்த சந்தர்பத்தில் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Image may contain: 6 people, bedroom and indoorImage may contain: 2 peopleImage may contain: 1 person, outdoor