புதினங்களின் சங்கமம்

சற்று முன்னர் ஈரான் 15 ஏவுகணைகளை அமெரிக்க தளங்கள் மீது ஏவி தாக்கியுளது- வெடித்தது யுத்தம்…(Video)

சற்று முன்னர் ஈரன் தனது குவைம்- 1 என்ற பலஸ்டிக் ஏவுகணைகளை, அமெரிக்க தளங்கள் மீது ஏவியுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. சுமார் 500 கிலோ கிராமுக்கு மேல் வெடிபொருட்களை சுமந்து சென்று தாக்க வல்ல பலஸ்டிக் ஏவுகணைகளையே ஈரான், ஈராக் நாட்டில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது முதல் கட்டமாக ஏவியுள்ளது. இந்த 15 ஏவுகணைகளும் அமெரிக்க தளங்களை தாக்கியுள்ளது.

இருப்பினும் எவரும் இறக்க வில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால் ரம், சற்று முன்னர் அறிவித்துள்ளார். இதற்கு அமெரிக்கா பதிலடிகொடுக்குமாக இருந்தால், அடுத்த கட்டமாக ஸ்ரேலையும் தமது ஏவுகணைகள் தாக்கும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. “ஆப்பரேஷன் சுலைமானி” என்று இதற்கு பெயரிட்டுள்ள ஈரான். இத்தாக்குதல் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கு அமெரிக்கா என்ன பதிலடி கொடுக்கப் போகிறது என்பது தெரியவில்லை.

ஆனால் வளைகுடாவில் போர் ஆரம்பமாகிவிட்டது என்பது தெரிகிறது. தொடர்சியான செய்திகளுக்கு இணையத்தோடு இணைந்திருங்கள்.