வவுனியாவில் விபத்து : இராணுவத்தினர் உட்பட 12 பேர் வவுனியா வைத்தியசாலையில் (Photos)
தங்காலையிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பேருந்து தடம்புரண்டதில் 4 இராணுவத்தினர் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை வவுனியா , இரட்டைப்பெரியகுளம், குருந்துப்பிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்
அவர்களில் நால்வர் இராணுவத்தினர் எனவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் பேருந்தின் சாரதியை கைது செய்த பொலிசார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

