க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகள் பெற்ற மாணவர்களின் விபரங்கள் இதோ!! (Photos)
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தனது தந்தையை தொலைத்து காணாமல் போனவர்கள் பட்டியலில் தந்தையை தேடிக்கொண்டிருக்கும் குறித்த மாணவி ஒரு கையை இழந்த தன்னுடைய தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் .நிலையில் வெளியாகியுள்ள 2019 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் வணிகத்துறையில் மாவட்ட ரீதியில் முதலாமிடம் பெற்று சாதித்துள்ளார்.
தேவிபுரம் அ பகுதி இனியவாழ்வு இல்லம்
அருகாமை.
இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில் இவருடைய தாயாரையும் பாராட்டி வருகின்றனர் . வறுமையிலும் கணவர் காணாமல் போயுள்ள நிலையிலும் தனது இரண்டு பிள்ளைகளையம் கல்வியில் முன்னேற்றுவதற்காக உழைக்கிறார் . இந்த தாய் பிள்ளையின் பல்கலைக்கழக படிப்புக்கு
சமூக மற்றும் புலம்பெயர் உறவுகள்
உதவிகள் வழங்கி உயர்கல்விக்கு உதவிட
முன் வாருங்கள்.




கணிதப்பிரிவு மாணவன்


இலங்கையில் மிகவும் பின்தங்கிய கிராமமான நெடுந்தீவில் இம்முறை 3A! தமிழ் மாணவன் சாதனை .
தற்போது கிடைக்கபெற்ற தகவலுக்கு அமைய இலங்கையில் மிகவும் பின்தங்கிய கிராமமான நெடுந்தீவு மகாவித்தியாலயத்தினை சேர்ந்த மாணவன் யேசுதாசன் கிறிஸ்துராஜன் 3A சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
கலைப்பிரிவில் 3A சித்திகளைப் பெற்றுள்ளதுடன், மாவட்ட நிலையில் 03வது இடத்தினையும் பெற்று கொண்டுள்ளார்.
இதேவேளை, தேசிய ரீதியில் 288வது இடத்தினையும் பெற்று யேசுதாசன் கிறிஸ்துராஜன் தாய் மண்ணுக்கும், பாடசாலைக்கும் பெருமை தேடித்தந்துள்ளார்.


யாழ்ப்பாணம் விக்ரோறியாக் கல்லூரியின்
எழிலினி பிரணவரூபன்
உயிரியல் பிரிவில்
A 2B மாவட்டநிலை ~ 34
அகில இலங்கை நிலை ~394
Z-SCORE 2.14

வட்டு இந்துக் கல்லூரி வரலாற்று சாதனை…..!
பொறியியல் தொழில்நுட்ப பாடப்பிரிவில் மாவட்ட ரீதியில் 1வதாகவும் அகில இலங்கை ரீதியில் 4வதாகவும் வந்து சாதனை படைத்து பெற்றோருக்கும் பாடசாலைக்கும் பெருமை தேடிய ரம்போ ராகவன் ற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.


மானிப்பாய் மகளீர் கல்லூரி மாணவி
3A -மாவட்ட நிலை 6 ரூபினி
2AB
2AC

3A மாணவ,மாணவிகளில் சிலர்










