புதினங்களின் சங்கமம்

யாழ் நாவலர் வீதி சீரடி பாவாவும் சீரழிவுக் காட்சிகளும் –

யாழ் மண்ணில் சைவம் தளைத்தோங்கிய ஆறுமுக நாவலர் பிறந்த பூமியில் அதுவும் வடக்கின் அடையாளமான நல்லூரில் சைவத்துக்கு நடந்த அவமானம் .
எத்தனையோ வருட யுத்தம் எத்தனையோ மதமாற்றங்கள் அத்தனையும் தாண்டி வளர்ந்த சைவ பாரம்பரியத்தையும் , புகழ்பூத்த கைலாச பிள்ளயார் கோவில் , அருகில் தொன்மை பொருந்திய மடத்தார் வளவு வைரவர் இதனிடையே முளைத்தவர் தான் இந்த இந்த சீரடி பாவா .
வெளிநாட்டுப் பணத்தில் கவர்ச்சியான திருவிழாக்கள் , இளசுகளின் பொழுது போக்கிடம் , ஆடம்பர உணவு என ஓகோ என வருமானம் . அவ்வளவுடனாவது நின்று விடவில்லை .
பாவாவுக்கு மதுபானம் படைத்து பூசையாம் .
அதுவும் இந்துக்களின் புனித அடையாளமான நந்திக்கு முன்னால் மதுபானம் படைக்கப்பட்டுள்ளது.
இது ஒரு சமய சீரழிவு மட்டுமல்ல , சமூக விரோத செயலும் கூட.
இன்று எமது சமூகம் எதிர் நோக்குகின்ற மிகப்பெரிய சவால் பாடசாலை மாணவர்களின் மதுபானப்பாவனைதான் .
மாணவர்களை அதில் இருந்து விடுவிக்கும் நல்வழிப்படுத்த வேண்டிய சமய நிறுவனங்கள் தமது நோக்கை மறந்து வழிதவறி போகின்றன என்பதற்கு இது ஓர் சிறந்த உதாரணமும் பிழையான முன்னுதாரணமும் ஆகும் .

இவ்வாறான செயற்பாடுகளை தொடரந்தும் நாம் கண்டு கொள்ளாமல் இருப்போமாயின் யாழ்ப்பாணத்திலும் நித்தியானந்தாக்கள் உருவாவதை தடுக்கவே முடியாது. எனவே
இவ்வாறான நாதாரிகளை இனங்கண்டு அப்புறப்படுத்தி எமது சமூகத்தை பாதுகாப்போம் . -தொடரும்
நன்றி
பேஸ்புக் பக்கம்

சட்டத்துக்குப் புறம்பாக பொது இடத்தில் மதுசாரத்தை காட்சிப்படுத்துவதற்கு இந்த காட்சிகளை கண்டும் மதுவரித்திணைக்களம் மற்றும் பிரதேசசெயலாளர், மாநகரசபையினர் பேசாமடைந்தைகளாக இருந்தால் அவர்களும் குற்றவாளிகளே……

Image may contain: 1 personImage may contain: 1 person, eating, sitting, table, food and indoor