ராஜித சேனாரத்னவிற்கு விளக்கமறியல் – நீதவான் உத்தரவு!
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு 30 ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராஜித சேனாரத்னவிடம் விசாரணைகளை மேற்கொள்ள கொழும்பு மேலதிக நீதவான் லங்கா வைத்தியசாலைக்கு சென்றிருந்தார்.
குறித்த விசாரணையின்பின்னரே அவரை 30 ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்க உத்தரவிட்டார்.
ராஜித சேனாரட்ன சற்றுமுன்னர் கைது
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Update – ராஜிதவின் 3ஆவது முன்பிணை மனு நிராகரிப்பு: நீதிமன்றின் உத்தரவு
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்னவை கைது செய்யுமாறு நீதவான் பிறப்பித்த பிடியாணையை நிறைவேற்றுமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் ராஜித சேனாரட்ன தன்னை கைதுசெய்வதை தடுக்குமாறு சட்டத்தரணியூடாக தாக்கல் செய்த மனுவையும் நிராகரித்தார்.

