கிளிநொச்சியில் குளத்தில் குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி சடலமாக மீட்பு!!
குளத்தில் மகனுடன் நீச்சலிட சென்றவர் சடலமாக மீட்பு.
கிளிநொச்சி முரசுமோட்டையை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் நவநீதன் (வயது41) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் தெரியவருவது ஊரியான் குளத்தில் இன்று மதியம் 1மணியளவில் மகனுடன் குளிக்க சென்றவர் குளத்தில் காணாமல் போயுள்ளார்.
தொடர்ந்து மக்கள் பொலிசார், கிராம சேவகருக்கு தகவல் வழங்கியதையடுத்து, அவரை முதலை இழுத்து சென்றதாக நம்பப்பட்டு பொதுமக்களுடன் இராணுவத்தினரும் தொடர்ந்து தேடிய நிலையில் நீண்ட நேரத்தின் பின் காணமல் போனவர் 4.30மணியளவில் சடலமாக மீட்கப்பட்டார்.














