புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்தில் ஆறு வாள்வெட்டு குழுக்கள்! பகிரங்கப்படுத்திய மகேஷ் சேனாரட்ன

யாழ்ப்பாணத்தில், இளம் வயதுடைய இளைஞர்களே வாள்வெட்டில் ஈடுபடுகின்றனரெனவும் 6 வாள்வெட்டுக் குழுக்கள் தம்மால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்டச் சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் மகேஷ் சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு, வாள் வெட்டுகள், கொள்ளை ஆகிவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கூட்டம், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், இன்று (24) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது பேசிய அவர்,

யாழில், ஆவா குழு உட்பட ஆறு வாள் வெட்டுக்குழுக்கள் செயற்படுகின்றன, புத்தாண்டுக்குள் அவர்கள் அனைவரையும் எம்மால் ஒழிக்க முடியும். இளம் வயதுடைய இளைஞர்களே வாள்வெட்டில் ஈடுபடுகின்றனர். ஆறு வாள் வெட்டுக் குழுக்களை அடையாளம் கண்டுள்ளோம்.

அந்தக் குழுக்களில் உள்ளவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கைகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன என்றார்.