தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இந்தியர்கள் மூவர் உள்பட நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தெற்கு அதிவேக வீதியின் வெலிப்பன்ன – குறுந்துகஹஹெத்தெம்ம பகுதியிலேயே இந்த விபத்து இன்றிரவு இடம்பெற்றது.
இந்த விபத்தில் 3 இந்தியர்கள் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
வான் ஒன்று கொள்கலன் வாகனத்துடன் மோதியதினாலேயே இந்த விபத்து இடம்பெற்றது.
இவ் விபத்துத் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





