புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் முஸ்லீம் கடையில் தமிழ் யுவதி மீது கொடூரத் தாக்குதல்!! குவிந்தனர் இளைஞர்கள் (பெரும் பதற்றம்)

வவுனியா வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் பெண்ணின் மீது அக்கடையின் உரிமையாளரது மகன் கடுமையாக தாக்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பசார் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் பணி புரியும் தமிழ் பெண்ணை அக்கடையின் உரிமையாளரின் மகன் தாக்கியுள்ளதாகவும், இதன்போது அப்பகுதியில் இளைஞர்கள் ஒன்றுகூடியுள்ளனர். இதனால் சில மணிநேரம் குறித்த இடத்தில் குழப்பநிலை ஏற்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வர்த்தக நிலையத்தில் கடமை புரியும் பெண் ஊழியர் கண்ணாடி பொருள் ஒன்றை உடைத்ததாக தெரிவித்து உரிமையாளரின் மகன் பெண்ணை நிலத்தில் தள்ளிவிட்டு சரமாரியாக தாக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இதனால் அப்பகுதியில் ஒன்று கூடிய பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் தாக்கியதாக தெரிவிக்கபடும் நபரையும், அப்பெண்ணையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

Image may contain: 2 people, outdoorImage may contain: 11 people, people sitting and crowdImage may contain: 3 peopleImage may contain: 2 people, people standing and outdoorImage may contain: 7 people, people standingImage may contain: 11 people