புதினங்களின் சங்கமம்

திருகோணமலையில் வைத்தியரின் வீட்டில் கணவன், மனைவி செய்த கேவலம்!!

திருகோணமலை – பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்தியர் ஒருவரின் வீட்டில் திருடிய கணவன் மற்றும் மனைவியரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம். எச். எம். ஹம்ஸா முன்னிலையில் இவர்களை இன்று (17) ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் திருகோணமலை, சல்லி, சாம்பல்தீவு பகுதியைச் சேர்ந்த 36 வயது மற்றும் 34 வயதுடைய கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.