புதினங்களின் சங்கமம்

ஐரோப்பாவில் கக்கூசு கழுவி உழைச்ச காசை புங்குடுதீவு கண்ணகை அம்மன் பறிப்பது ஏன்?

புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோயில் எனக்கு தெரியா ஐம்பதாவது தடவை இடிச்சு பெரிசா கட்டுறாங்க இந்த முறை பெரிசா கட்டுறதை பார்த்தால் புங்குடுதீவு காணாது போல வெளிவீதி வேலனைவரை வர சான்ஸ் இருக்கு டிசைன் அப்படி….

இதில வேற கடற்படை 14 ஏக்கர் எடுக்கிறதாம் என ஒருகதை போகுது அதுக்கு புங்குடுதீவில எங்க காணியிருக்கு என்னும் டவுட்டு வருது…

ஆக இன்னும் ஒரு பத்து வருடம் போக புங்குடுதீவில பிரமாண்ட கோயில்கள் மட்டும்தான் இருக்கும்.இப்ப இருக்கும் சனம் எங்க போய் இனி இருக்கும்.?

இந்த புது வெளிநாட்டு காசுக்காறர் உபயம் வினாசியர் என எழுதனும் என்பற்காக போன மாதம் கட்டின மணிக்கூட்டு கோபுரத்தை இடிச்சு இன்னும் மூனு அடி உயரமா கட்டுறாங்க முடில்ல…

ஷப்பா இந்த பெருமை பீத்தல் எல்லாம் அடுத்த தலமுறை எவனும் போய் ஊரில போய் நின்று புல்லரிக்க போறதில்லை,ஐரோப்பில காலையில் குளிரில் எழும்பி போய் கக்கூஸ் கழுவி உழைச்ச காசை ஆறு அடி சுவர் கட்டித்தான் உங்களை பெரிய கோடீஸ்வரன் பரம்பரையாக காட்டனும் என்னும் தேவையில்லை…

நாலு பிள்ளைகளை படிப்பிச்சு விடுங்க காலம் காலம் இன்னார்தான் என்னை டாக்கடர் ஆக்கின இஞ்சினியர் ஆக்கின என பெருமையாக சொல்லுங்கள் உங்கள் பிள்ளைகள் போனாலும் மதித்து மரியாதை கொடுக்குங்கள்..

பணத்தை மண்ணில போடாமல் மனிதரில் போடுங்கள் கல்வியில் போடுங்கள் அறிவு வளரும் ஊர் வளரும்.

இவருக்கு இதே வேலை
யோ ?