புதினங்களின் சங்கமம்

கேகாலையில் 13 வயதுச் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த பின் 19 வயது யுவதியுடன் குடும்பம் நடாத்திய 17 வயது சிறுவன் பிடிபட்டது எப்படி?

கேகாலையில் சில மாதங்களுக்கு முன்னர் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்துவிட்டு, பின்னர் 19 வயதுடைய யுவதி ஒருவரை வீட்டிற்கு அழைத்து வந்து குடும்பம் நடத்திக் கொண்டிருந்த பதின்ம வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டவர் கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொலகொட பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பதின்ம வயது இளைஞன் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இளைஞன் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அயல் வீட்டைச் சேர்ந்த 13 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மாணவி துஷ்பிரயோகம்
அதன் பின்னர், அவர் 19 வயதுடைய யுவதி ஒருவருடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

அந்த யுவதியையும் சில நாட்களுக்கு முன்னர் தனது வீட்டிற்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட 13 வயதுடைய சிறுமி தனக்கு நேர்ந்த இச்சம்பவம் குறித்து பாடசாலை ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஆசிரியர்கள் இச்சம்பவம் குறித்து கேகாலை பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து அந்த மாணவி கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான சிறுவன் நேற்று முன்தினம் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் அங்கு சென்ற போது, 19 வயது யுவதியும் அந்த வீட்டில் இருந்துள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x