புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசிபலன்கள் (09.12.2019)

மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில நேரங்க ளில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபா ரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்து போவது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள்.

ரிஷபம்: கொஞ்சம் அலைச்சலும், சிறு சிறு ஏமாற்றங்களும் வந்து நீங்கும் . பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். மற்றவர்களிடம் நிதானம் தேவை. அனாவசிய செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் பணி களைப் போராடி முடிப்பீர்கள். கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

மிதுனம்: உங்கள் அணுகு முறையை மாற்றி வெற்றி பெறுவீர்கள். பெற்றோர் மற்றும் சுற்றத்தார் உதவிகரமாக இருப்பார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உங்களால் பயனடைந்தவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தி யோகத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புகழ் கூடும் நாள்.

கடகம்: உணர்ச்சி பூர்வமாக பேசுவதை விட்டுவிட்டு அறிவு பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவல கத்தில் மரியாதை கூடும். சாதிக்கும் நாள்.

சிம்மம்: இதுவரை இருந்து வந்த சோர்வு, கோபம் நீங்கி அமைதி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி திரும்பும். எதிர்பார்த்த இடத்திலிருந்து தேவையான உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் உதவி கிடைக்கும். புதியபாதை தெரியும் நாள்.

கன்னி: சந்திராஷ்டமம் தொடர்வதால் முதலில் சந்தேகப்படு வதை நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவரிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. நாசுக்காகப் பேசுபவரை நம்ப வேண்டாம். வியாபாரத்தில், பழைய சரக்குகளை போராடிவிற்பீர்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச் சினை வந்து நீங்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

துலாம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புக்கள் வரும். சகோதர வழியில் நன்மை உண்டாகும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளை சாதாரணமாக முடிப்பீர்கள். திடீர் யோகம் கிட் டும் நாள்.

தனுசு: குடும்பத்தின் அடிப்படை தேவைகளையும், வசதிகளையும் மேம்படுத்துவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து, சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.

மகரம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பழைய நண்பர்கள் உதவுவார்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் பங்குதாரரின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சி களை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

கும்பம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகளை எடுத்து செயலாற்றுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார் கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். அர சால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில், பழையவேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தி யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தரு வார்கள். வெற்றி கிடைத்திடும் நாள்.

மீனம்: குடும்பத்தில் இதுவரை இருந்த மனக்குழப்பங்களும், பிரச்சினைகளும் நீங்கும். வராது என்று நினைத்திருந்த பணம்கைக்கு வந்து சேரும். புதியவர்க ளின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப் பார்கள். மகிழ்ச் சியான நாள்.