கிசு கிசு

கள்ளத்தொடர்பில் காதல் மனைவி?? கணவன் செய்த வெறிச் செயல்!!

திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட விவகாரம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராமபுரத்துக்கு அருகில் உள்ள நெசப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அருள்குமார். இவர் சந்தியா (20) என்கிற பெண்ணை காதலித்து வந்தார். பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், தனது வீட்டின் அருகே உள்ள பேன்சி ஸ்டோர் உரிமையாளிடம் சந்தியா பழகி வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக அருள்குமாருக்கும், அவருக்கும் அடிக்கடி சண்டை நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் இருவரும் சண்டை போட்டுள்ளனர். அப்போது சந்தியாவை அருள்குமார் தாக்கியுள்ளார். அப்போது அருகிலிருந்த சந்தியாவின் தாயார் சரிதா இருவரையும் தடுத்துள்ளார். ஆனால், ஆத்திரத்தின் உச்சத்தில் சென்ற அருள் அங்கிருந்த கத்தியை எடுத்து சந்தியாவை குத்த முயன்றுள்ளார். அதை சரிதா தடுக்க முயன்றுள்ளார். ஆனால், அவரை கீழே தள்ளிவிட்டு சந்தியாவின் கழுத்தில் கத்தியால் அருள் குத்தியுள்ளார். இதில் ரத்தம் பீறிட்டு சந்தியா அங்கே துடிதுடித்து இறந்துவிட்டார்.

இதுபற்றி உடனடியாக அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார் அருள்குமாரை கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.