ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்துளைக் கிணற்றில் வீழ்ந்த 5 வயது சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ராஜஸ்தான் மாநிலம் சிரோகி பகுதியின் சிபோகான் கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் விளையாடும் போது ஆழ்துளைக் கிணற்றில் தவறி வீழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது 15 அடியில் சிக்கியிருக்கும் குறித்த சிறுவனை மீட்கும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
சிறுவனுக்குத் தேவையான தண்ணீரும் ஒட்சிசனும் வழங்கப்பட்டுவரும் நிலையில் குழந்தையை மீட்க பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
அண்மையில் தமிழகத்தில் இரண்டு வயதுக் குழந்தையான சுர்ஜித் ஆழ்துளைக் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இதனையடுத்து ஆழ்துளைக் கிணறுகளை மூடுமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மற்றுமோர் சிறுவன் ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





