புதினங்களின் சங்கமம்

யாழில் 8 கோடி ரூபா தீயில் எரிந்து நாசமான காட்சிகள் இதோ!! (Video)

யாழ்ப்பாணத்தில் சுமார் 8 கோடி ரூபாய் பெறுமதியான 8 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரின் உத்தரவிற்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதியன்று காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து 6 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து 8 கிலோ 128 கிராம் 33 மில்லிக்கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாகக் கடற்படையினர் தெரிவித்தனர்.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்று 6 இந்திய மீனவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் வழக்குத் தொடுனரால் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்படாத நிலையில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதன்காரணமாக இந்திய மீனவர்கள் 6 பேரையும் விடுதலை செய்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கின் சான்றுப்பொருளான 8 கிலோ 128.3 கிராம் ஹெரோயினை தீயிட்டு அழிக்குமாறு மன்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டது.

Image may contain: fire and outdoorImage may contain: one or more people, people standing and outdoor