5 வயது மகளை துஸ்பிரயோகம் செய்து கொலை செய்த கொடூரனின் அந்தரங்கத்தை அறுத்தெறிந்த தாய்!!
ஐந்து வயது மகளிடம் அத்துமீறிய இளைஞரின், அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்க்கு தொண்டு நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
ஆப்பிரிக்காவை சேர்ந்த 23 வயதான வெரோனிக் மக்வேனா என்கிற தாய் கடந்த அக்டோபர் மாதம், தனது ஐந்து வயது மகள் சாண்டெல்லியை நண்பர் ஒருவரின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு சகோதரியுடன் கடைக்கு சென்றுள்ளார்.
திரும்பி வந்து பார்த்த போது, வீடு முழுவதும் விளக்கு எரியாமல் இருளாக இருந்துள்ளது. மகள் வீட்டில் இல்லாததால் அக்கம்பக்கம் என இரவு முழுவதும் தீவிரமாக தேடியுள்ளார்.
மறுநாள் காலையில் இரத்தம் சிந்தியபடியே கிடந்த சாண்டெல்லியின் உடலை அவருடைய தந்தை பொதுக்கழிப்பறையில் இருந்து கண்டெடுத்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் மக்வேனாவின் உறவினரான 20 வயது இளைஞரின் டிஎன்ஏ பரிசோதனைகளை எடுத்துச்சென்றனர்.
ஆய்வு முடிவுகள் வர ஒருமாத காலம் ஆகும் என்பதால் அவரை தற்போது கைது செய்ய முடியாது எனவும் கூறியுள்ளனர். ஆனால் ஆத்திரம் தீராத மக்வேனா, சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு சம்மந்தப்பட்ட இளைஞரை பழிவாங்க முடிவு செய்துள்ளார்.
அதன்படி தனது 25 வயது மருமகளான மானேலி மற்றும் குடும்ப நண்பர் பக்காடே (24) ஆகியோருடன் சேர்ந்து, இளைஞரின் அந்தரங்க உறுப்பை துண்டித்துள்ளார்.
இதனையடுத்து இந்த சம்பவமானது நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞர் தன்னை தாக்கிய மூன்று பேரின் பெயர்களையும் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
அதன்பேரில் மூன்று பெண்களையும் கைது செய்த பொலிஸார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களின் சார்பாக கட்டணம் எதுவும் இல்லாமல் ஆஜரான வழக்கறிஞர் ஃபண்டில் மாடோடோ, தாக்குதல் நடந்ததை மறுக்கவில்லை, ஆனால் அந்த பெண்கள் குற்றச்சாட்டுகளை குறைக்க வேண்டும் என நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து வழக்கை பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையில் சிறையில் இருக்கும் மூன்று பெண்களையும் ஜாமீனில் எடுப்பதற்காக பல்வேறு தொண்டு நிறுவனங்களும் நிதி திரட்டி வருகின்றன.

