யாழ் மண்கும்பானில் முச்சக்கர வண்டியுடன் மோதி கோர விபத்து..இளைஞன் படுகாயம் (photos)
யாழ்ப்பாணம்- ஊர்காவற்றுறை பிரதான வீதியில் உந்துருளி மற்றும் முச்சக்கர வண்டி என்பன மோதிக் கொண்டதில் விபத்து ஏற்பட்டு ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;மண்கும்பான் பிள்ளையார் கோவில் கடந்து ஊர்காவற்றுறை பிரதான வீதியில் உந்துருளி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற முச்சக்கர வண்டியுடன் மோதியது.இந்த விபத்தில் உந்துருளியை செலுத்தி சென்றவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன்

