Home புதினங்களின் சங்கமம் கிளிநொச்சி விதானை வீட்டில் காவாலிகள் அட்டகாசம் – நால்வர் படுகாயம் (Photos)

கிளிநொச்சி விதானை வீட்டில் காவாலிகள் அட்டகாசம் – நால்வர் படுகாயம் (Photos)

கிளிநொச்சிதட்டுவன் கொட்டி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் நால்வர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள கிராம சேவையாளர் ஒருவரின் சகோதரர்கள் மற்றும் உறவினர்களே இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத மண்ணகழ்வு தொடர்பில் கிராம்சேவையாளர் தொடர்ச்சியாக மேற்கொண்டதன் அடிப்படையில் இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

<

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தட்டுவன் கொட்டி பகுதியில் முற்பகல் 11 மணியளவில் சுமார் ஏழுபேர் கொண்ட குழுவினர் அப்பகுதியில் நடமாடியுள்ள நிலையில், சிறிது நேரத்தின் பின்னர் குறித்த வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த நபர்கள் மீது வாள்களினால் தாக்குதல் மேற்கொண்டதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதன்போது கிராம சேவையாளரின் இரு சகோதரர்கள் மற்றும் சகோதரியின் கணவரின் ஒன்று விட்ட சகோதரரும் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

<

சம்பவத்தை தொடர்ந்து குறித்த வீட்டை இலக்கு வைத்து கண்ணாடி போத்தல்களாலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு அங்கு நின்ற வாகனம் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 08.09.2019 அன்று குறித்த கிராமசேவையாளரை தாக்கியமை தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் நேற்று இரவு குறித்த மற்றுமொரு சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த பகுதியில்கடமையாற்றிய கிராமசேவையாளர் அச்சம் காரணமாக வேறு இடத்தில் கடமை செய்து வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த பகுதியில் தொடர்ச்சியாக அதிகளவான மணல் சூரையாடப்பட்டு வெளி மாவட்டங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த கிராம சேவையாளர் தடுக்கும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளார்.

குறித்த சட்டவிரோத செயற்பாடுகளை பொலிசாருடன் இணைந்து தடுத்து வந்த நிலையில் கிராம சேவையாளரிற்கு அப்பகுதியை சேர்ந்த சிலரால் தொடர் அச்சுறுத்தல் விடுக்கபட்டுள்ளது.

இதேவேளை நேர்மையான முறையில் தமது கடமைகளை நிறைவேற்றும் அதிகாரிகளிற்கு பாதுகாப்பற்ற நிலை கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் அதேவேளை, சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க முற்படும் சமூக ஆர்வலர்கள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல் விடுக்கபடுகின்றதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே இவ்வாறான நிலையில், நேர்மையான அதிகாரிகள், சாட்சியாளர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் பொலிசார் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.