Home புதினங்களின் சங்கமம் பால் லொறியிலிருந்து வீழ்ந்து 13 வயது மாணவி பலி! ஏன் லொறியில் ஏற்றினாள்? சாரதி கைது!

பால் லொறியிலிருந்து வீழ்ந்து 13 வயது மாணவி பலி! ஏன் லொறியில் ஏற்றினாள்? சாரதி கைது!

நோர்வூட், வெஞ்சர்ஐம்பது ஏக்கர் பகுதியில் பால் ஏற்றிச் செல்லும் லொறியில் பயணித்த 13 வயதுடைய பாடசாலை மாணவி தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

புதன்கிழமை (25) பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில், பாடசாலையில் நடைபெற்ற பயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய மாணவி, பால் விநியோகத்தில் ஈடுபடும் லொறியின் பின்புறத்தில் ஏறிப் பயணித்துள்ளார்.

இதன்போது எதிர்பாராத விதமாக லொறியிலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த மாணவி, டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதியும் உதவியாளரும் நோர்வூட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments