Home புதினங்களின் சங்கமம் மன்னாரில் மாவீரர் தின பதாகை காட்சிப்படுத்திய 25 வயது இளைஞர் கைது!

மன்னாரில் மாவீரர் தின பதாகை காட்சிப்படுத்திய 25 வயது இளைஞர் கைது!

மன்னாரில் மாவீரர் தின நிகழ்வுடன் தொடர்புடைய பதாகையொன்றைக் காட்சிப்படுத்திய குற்றச்சாட்டில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது
மன்னார் எழுத்தூர் பகுதியில் வீதிக்கு அருகில் மாவீரர் தின பதாகையொன்றைக் காட்சிப்படுத்திய நிலையில், நேற்று வியாழக்கிழமை (26) இரவு குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீதியில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த இளைஞர் தொடர்பில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, இளைஞரின் உடைமையிலிருந்து மாவீரர் தின பதாகையொன்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடியொன்றும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட இளைஞர் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments