யாழ்ப்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் இரு பல்கலைக் கழக மாணவர்கள் மீது பிளேற் கொண்டு வெட்டிய சக மாணவர்களை 26 ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைப் கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்கள் இருவர் மீது நேற்று வியாழக் கிழமை இரவு ஓர் மாணவர் குழு மூர்க்கத் தனமாகத் தாக்கி பிளேற்றினால் அதிக இடங்களில் வெட்டியும. சித்திரவதை புரிந்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்ப்ட இரு மாணவர்களும் நேற்று இரவே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து இவ் விடயம் தொடர்பில் இன்று வெள்ளிக் கிழமை விசாரணையில் ஈடுப்பட்ட கோப்பாய் பொலிஸார் இது தொடர்பில் 20 மாணவர்களை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆயர் செய்தனர்.
இவற்றை ஆராய்ந்த நீதவான் 20 பேரையும் எதிர் வரும் 26 ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.




