Home புதினங்களின் சங்கமம் இலங்கைக்கு வந்த 40 வயதான ரஷ்ய பெண் சுற்றுலா பயணி மீது குஞ்சுமணி தாக்குதல் நடாத்தியதுடன்...

இலங்கைக்கு வந்த 40 வயதான ரஷ்ய பெண் சுற்றுலா பயணி மீது குஞ்சுமணி தாக்குதல் நடாத்தியதுடன் பணமும் கொள்ளையடித்த சுற்றுலா வழிகாட்டியான மைனர் குஞ்சு கைது! மைனர் பல வெளிநாட்டு பெண்களை அவர்களின் சம்மதத்துடன்..

காலி, உனவட்டுன பகுதியில் முறையான அனுமதியின்றி சுற்றுலா வழிகாட்டியாகச் செயற்பட்டு, ரஷ்ய பெண் சுற்றுலாப் பயணியிடம் பாலியல் ரீதியான அத்துமீறலில் ஈடுபட்டதுடன், அவரைத் தாக்கி பணத்தையும் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த நவம்பர் 5ஆம் திகதி சுற்றுலா விசாவில் இலங்கை வந்த 40 வயதுடைய ரஷ்ய பெண்ணே இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.

விசாரணைகளின்படி, கடந்த 12ஆம் திகதி இரவு உணவுக்காக அழைத்துச் செல்வதாகக் கூறி குறித்த பெண்ணை முச்சக்கரவண்டியில் காலி நகருக்கு சந்தேகநபர் அழைத்துச் சென்றுள்ளார்.

இதன்போது, பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றதாகவும், அதனை அவர் நிராகரித்ததைத் தொடர்ந்து அவரது கையடக்கத் தொலைபேசியைப் பறித்து 35,000 ரூபா பணம் கோரி அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் விடுதிக்குத் திரும்பும் வழியில் பெண்ணின் முகம் மற்றும் தலையில் தாக்கியதுடன், அவரிடமிருந்த 20,000 ரூபா பணத்தையும் வலுக்கட்டாயமாகப் பறித்துச் சென்றுள்ளார்.

இதன்போது முச்சக்கரவண்டி சாரதி தலையிட்டு தாக்குதலைத் தடுத்ததுடன், பெண்ணின் பயணப் பையையும் பாதுகாத்துள்ளார்.

குறித்த பெண் கடந்த நவம்பர் 13ஆம் திகதி உனவட்டுன சுற்றுலாப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். விசா காலம் முடிவடைந்ததால் அவர் தற்போது இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளார்.

பொலிஸாரின் விசாரணைகளைத் தொடர்ந்து பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக காலி தலைமையகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கொள்ளை, தாக்குதல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் அனுமதியின்றி சுற்றுலா வழிகாட்டியாகச் செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் சந்தேகநபர் இன்று (19) காலி பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments