Home புதினங்களின் சங்கமம் புலம்பெயர் நாட்டில் பிரபாகரனுக்கு அடித்த அதிஷ்டம்!

புலம்பெயர் நாட்டில் பிரபாகரனுக்கு அடித்த அதிஷ்டம்!

கனடாவின் ஸ்கார்ப் பகுதியைச் சேர்ந்த தமிழர் ஒருவர் 2 இலட்சம் கனடிய டொலர் லோட்டரி பரிசை வென்றுள்ளார். ஒன்டாரியோ லோட்டரி சபையின் ‘வால்ட்’ (Vault) எனப்படும் லோட்டரி சீட்டின் மூலம் பிரபாகரன் சதாசிவம் என்பவரே இந்தப் பாரிய தொகையை வென்றுள்ளார்.

வழக்கமாக லோட்டரி சீட்டுக்களை வாங்கும் பழக்கமுடைய பிரபாகரன், வணிக வளாகம் ஒன்றில் நின்றிருந்த போது இந்த சீட்டைச் சுரண்டிப் பார்த்துள்ளார். தனக்கு 2 இலட்சம் டொலர் முதல் பரிசு விழுந்திருப்பதைக்கண்டு தன்னால் நம்பவே முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார். உடனடியாக தனது சகோதரரிடம் அதனை காட்டியதாகவும், முதலில் அவரும் இதனை நம்பாத போதிலும் பின்னர் உண்மையை உணர்ந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாக பிரபாகரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பரிசுத் தொகையைக் கொண்டு ஸ்கார்ப் பகுதியில் புதிய உணவகம் ஒன்றைத் திறக்க உள்ளதாகவும், புதிய கார் ஒன்றை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஸ்கார்ப்ரோவின் லாரன்ஸ் அவென்யூ ஈஸ்ட் பகுதியில் உள்ள ‘சீடர் பிரையன் சென்டர்’ (Cedarbrae Mall) விற்பனை நிலையத்திலேயே இந்த அதிர்ஷ்ட லோட்டரி சீட்டு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. $20 பெறுமதியான ‘வால்ட்’ லோட்டரி சீட்டின் உச்சபட்ச பரிசுத் தொகையான இரண்டு இலட்சம் டொலரை பிரபாகரன் சதாசிவம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments