Home புதினங்களின் சங்கமம் பாழடைந்த கிணற்றுக்குள் ஆணின் சடலம்! 17 வயது யுவதி உட்பட 3 பேர் கைது! என்ன...

பாழடைந்த கிணற்றுக்குள் ஆணின் சடலம்! 17 வயது யுவதி உட்பட 3 பேர் கைது! என்ன செய்தார்கள்?

ஹொரவபொத்தானை பகுதியில் உள்ள பாழடைந்த விவசாயக் கிணற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், 17 வயதுடைய யுவதி உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி இஹலகும்புக்கொல்லாவ பகுதியைச் சேர்ந்த குறித்த நபரின் சடலம் பாழடைந்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஹொரவபொத்தானை காவல்துறையினர் ஆரம்பித்த விசாரணைகளின் போது, குறித்த நபர் தாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதுடன், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பல சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து, 17 வயதுடைய சந்தேகநபரான யுவதி ஒருவரும், 23 மற்றும் 26 வயதுடைய இரண்டு ஆண் சந்தேகநபர்களும் நேற்று (15) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் இஹலகும்புக்கொல்லாவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், அதே பகுதியிலேயே வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்துக்கான காரணம், சம்பவம் இடம்பெற்ற விதம் அல்லது சந்தேகநபர்களுக்கும் உயிரிழந்தவருக்கும் இடையிலான தொடர்பு குறித்த மேலதிக விபரங்களைக் காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரவபொத்தானை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments