Home புதினங்களின் சங்கமம் யாழில் போதைப்பொருள் கடத்தல் காவாலிக்கு ஆதரவாக களத்தில் குதித்த நீதிபதியின் மனைவி!

யாழில் போதைப்பொருள் கடத்தல் காவாலிக்கு ஆதரவாக களத்தில் குதித்த நீதிபதியின் மனைவி!

போதைப்பொருள் குற்றச்சாட்டு வழக்கில் சிறைக்குச் சென்று ஒரு வருடத்தின் பின் பிணையில் சிறையிலிருந்து வெளியேறி, ஓரிரு நாட்களிலேயே மீண்டும் போதைப்பொருள் மற்றும் வாள்களுடன் கைதான சைக்கிள் கட்சியின் முக்கிய உறுப்பினரான அத்தானின் மகன் முத்து மீண்டும் சிறைக்குள் அடைக்கப்பட்டான். இந்த வழக்கில் முத்துவுக்கு ஆதரவாக சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜராகியது பெண் சட்டத்தரணியான சர்மிளி ஆவார். இவரின் கணவர் ஒரு நீதிபதி ஆவார். இது தொடர்பாக சமூகநலனில் அக்கறையுள்ளவர்கள் கடும் விசனத்தை தெரிவித்துள்ளார்கள்.  ஏற்கனவே மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டு மீளவும் அதே குற்றத்தைச் செய்துள்ளமையால் பிணை ஒரு போதும் கிடைக்காது எனத் தெரிந்தும் குறித்த பெண் சட்டத்தரணி எதற்காக அவனுக்கு ஆதரவாக வாதாடச் சென்றார் என சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள் சிலர் சந்தேகம் தெரிவிக்கின்றார்கள். 

இருப்பினும், சட்ட ஏற்பாடுகளின்படி குறித்த நீதிபதியான கணவர் அதே நீதிமன்றில் கடமையாற்றினால் மட்டுமே நலன்களின் முரண்பாடு (Conflict of Interest) மற்றும் நீதிபதிக்கான விதிகளுக்கு ஏற்ப அங்கு சட்டத்தரணி சர்மிளி ஆஜராக முடியாதே தவிர, மற்றபடி குற்றவாளிகளுக்காக ஆஜராகலாம் என சட்டத்துறை வட்டாரங்கள் மூலம் தெரியவருகின்றது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments