Home புதினங்களின் சங்கமம் யாழ் – அநுராதபுர வீதியில் கோர விபத்து – 5 பேர் பலி! 50 ற்கும்...

யாழ் – அநுராதபுர வீதியில் கோர விபத்து – 5 பேர் பலி! 50 ற்கும் மேற்பட்டோர் படுகாயம்! வீடியோ

அநுராதபுரத்தில் 3 பஸ்கள் மோதி கோர விபத்து! 5 பேர் உயிரிழப்பு. 50க்கு மேற்பட்டோருக்கு காயம்

யாழ்ப்பாணம் – அனுராதபுரம் பிரதான வீதியின் ரம்பேவ பகுதியில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகளும் ஒரு தனியார் பேருந்துமே மோதி விபத்துக்குள்ளியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளதுடன், பின்னால் வந்த தனியார் பேருந்து ஒன்று குறித்த பேருந்துகளில் ஒன்றைய மோதியுள்ளது.

விபத்தில் 5 பேர் பலியானதுடன் காயமடைந்தவர்கள் அனுராதபுரம், ரம்பேவ மற்றும் மதவாச்சி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments