Home புதினங்களின் சங்கமம் திருகோணமலையில் தொழிலதிபரை தங்க சங்கிலிக்காக கொன்ற கொடூரன் – விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!

திருகோணமலையில் தொழிலதிபரை தங்க சங்கிலிக்காக கொன்ற கொடூரன் – விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!

தென்கொரியாவில் 8 ஆண்டுகள் உழைத்துச் சேமித்த பணத்தில் சுற்றுலா விடுதியை அமைத்து நடத்தி வந்த திருமணமாகாத தொழிலதிபர் நிமல் கொஸ்கொல்ல, அவரது கழுத்திலிருந்த தங்கச் சங்கிலிக்காகவே கொ**லை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பை முடித்துக்கொண்டு இலங்கை திரும்பிய அவர், திருகோணமலை சிங்கபுர பகுதியில் சுற்றுலா விடுதி ஒன்றை நிர்மாணித்து நடத்தி வந்ததுடன், அந்த விடுதியின் ஓர் அறையிலேயே தங்கியிருந்துள்ளார்.

அதே விடுதியில் தங்கியிருந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த இரத்மலானை பகுதியைச் சேர்ந்த நபரே இந்தக் கொலையைச் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பலரிடம் கடன் பெற்றிருந்த குறித்த சந்தேகநபர், கடன்களை அடைப்பதற்காகத் தொழிலதிபரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைக் கொள்ளையிடும் நோக்கில் அவரைக் கொலை செய்துள்ளார்.

கொலையின் பின்னர் தங்கச் சங்கிலியைக் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்ற சந்தேகநபர், அதனைத் தனது மனைவியிடம் ஒப்படைத்துள்ளார். பின்னர் அவரது மனைவி கொழும்பிலுள்ள நகைக்கடை ஒன்றில் அந்தச் சங்கிலியை 11 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளார்.

கிடைத்த பணத்தைத் தனது வங்கிக் கணக்கில் வைப்புச் செய்து, பல்வேறு சந்தர்ப்பங்களில் கடன்களை அடைத்துள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இரத்மலானை பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

”8 ஆண்டுகள் உழைத்துச் சேர்த்த கனவு ஒரே நொடியில் சிதைக்கப்பட்டது. பணத்திற்காக ஓர் உயிரைப் பறித்த கொடூரம்”

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments