Home புதினங்களின் சங்கமம் நுவரெலியாவில் BBQ அடுப்பால் மூச்சுத்திணறல் – தம்பதியினர் இருவர் உயிரிழப்பு.!!

நுவரெலியாவில் BBQ அடுப்பால் மூச்சுத்திணறல் – தம்பதியினர் இருவர் உயிரிழப்பு.!!

நுவரெலியா, மீப்பிலிமனா பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த தம்பதியினர் இருவர், மூடிய அறைக்குள் BBQ அடுப்பைப் பயன்படுத்தியதால் வெளியான நச்சு வாயுவைச் சுவாசித்து உயிரிழந்துள்ளனர்.

அவிசாவளையைச் சேர்ந்த 52 வயதுடைய கணவரும், 46 வயதுடைய மனைவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கடும் குளிர் காரணமாக BBQ அடுப்பை அணைக்காமல் அறைக்குள் வைத்துவிட்டு உறங்கச் சென்றதால், அதிலிருந்து வெளியான கார்பன் மோனாக்சைடு வாயுவைச் சுவாசித்தமையே உயிரிழப்புக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BBQ அடுப்புகள் மற்றும் நிலக்கரியைப் பயன்படுத்தும் உபகரணங்களை ஒருபோதும் மூடிய அறைகளுக்குள் பயன்படுத்த வேண்டாம். நிறமற்ற, மணமற்ற கார்பன் மோனாக்சைடு வாயு உயிருக்கு ஆபத்தானது. அறைக்குள் பரவும் இந்த வாயு உயிரிழப்பையும் ஏற்படுத்தக்கூடும்.

குளிர் பிரதேசங்களுக்குச் சுற்றுலா செல்பவர்கள் இந்த அபாயம் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுங்கள்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments