Home புதினங்களின் சங்கமம் ஆயுள்வேத மருந்துகளால் கஞ்சா போதை போன்ற அறிகுறியா? யாழில். கைதான பேருந்து சாரதி சார்பில் மன்றில்...

ஆயுள்வேத மருந்துகளால் கஞ்சா போதை போன்ற அறிகுறியா? யாழில். கைதான பேருந்து சாரதி சார்பில் மன்றில் சமர்ப்பணம்!

யாழ்ப்பாணத்தில் கஞ்சா போதையில் சாரத்தியம் செய்த குற்றச்சாட்டில் கைதான சாரதி , ஆயுள்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வருவதனால் , தான் கஞ்சா போதை பாவித்தமைக்கான அறிகுறிகள் காட்டப்பட்டதாக சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்துறைக்கு பயணிகளை ஏற்றி சென்ற பேருந்தின் சாரதி போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

அதனை அடுத்து மறுநாள் , ஊர்காவற்துறை நீதிமன்றில் அவரை பொலிஸார் முற்படுத்திய நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சாரதி மன்றில் முற்படுத்தப்பட்டார்

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது சாரதியின் தரப்பின் முன்னிலையான சட்டத்தரணி , தனது கட்சிக்காரர் போதைப்பொருள் பாவிக்கவில்லை. அவர் ஆயுள்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். அதனால் , பரிசோதனையில் போதைப்பொருள் பாவித்தமைக்கான அறிகுறிகள் காணப்பட்டு இருக்கும் என தெரிவித்ததுடன் , மருத்துவ அறிக்கை , ஆயுள்வேத வைத்தியரின் உறுதிப்படுத்தல் அறிக்கை மற்றும் பாவிக்கும் மருந்துகள் என்பவற்றை மன்றுக்கு காண்பித்து பிணை விண்ணப்பம் செய்தார்.

அதனை அடுத்து சாரதியை இரண்டு சரீர பிணையில் செல்ல அனுமதித்த மன்று வழக்கினை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments