Home புதினங்களின் சங்கமம் 14 வயது மாணவி கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டு தொடர்ச்சியாக துஸ்பியோகம்!

14 வயது மாணவி கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டு தொடர்ச்சியாக துஸ்பியோகம்!

14 வயதுடைய பாடசாலை மாணவியொருவர், தனது தோழியின் ஆலோசனையின் பேரில் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு, விடுதியொன்றில் தங்கி வைக்கப்பட்டு, சட்டபூர்வ பாதுகாப்பிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அத்திமலே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மொனராகலை, அத்திமலே பிரதேசத்தைச் சேர்ந்த மாணவியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

அத்திமலே, படுலந்த, விலஓய 06 ஆம் கட்டைப்பகுதியில் வசிக்கும் மாணவி காணாமல் போயுள்ளதாக அவரது தாயாரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, காணாமல் போனதாகக் கூறப்பட்ட மாணவி, தனது தாயாருடன் அத்திமலே பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.

விசாரணைகளின் அடிப்படையில், குறித்த மாணவி அக்டோபர் மாதம் 29 ஆம் திகதி வியாழக்கிழமை பாடசாலைக்குச் சென்று, தனது தோழி ஒருத்தியுடன், அவரது காதலனுடன் சாதாரண உடைகளுக்கு மாறி, கொழும்பு செல்லும் பேருந்திலியேறி பணிவாய்ப்புக்காகக் கொழும்புக்கு சென்றுள்ளார். அங்கு பெண் ஒருவர் மாணவியை விடுதியொன்றில் தங்க வைத்துள்ளார்.

இதனிடையே, மாணவியின் தாயார் முகநூலில் (Facebook) பதிவிட்ட விளம்பரத்தைக் கண்ட குறித்த மாணவியான மகள், நவம்பர் மாதம் 02 ஆம் திகதி திங்கட்கிழமை பேருந்து மூலம் மீண்டும் அத்திமலே பிரதேசத்திற்கு வந்து சேர்ந்துள்ளார்.

மாணவி மேலதிக மருத்துவப் பரிசோதனைகளுக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை மொனராகலை, அத்திமலே பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments