ஐரோப்பாவில் 30 ஆண்டுகளாகப் பணியாற்றிய நிலையில், இலங்கையில் மனைவி, பிள்ளையுடன் வாழத் தயாரான இலங்கையர் ஒருவர் கோர விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இத்தாலியில் இடம்பெற்ற கோர வாகன விபத்தில் 58 வயதான திலக் ரோசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இத்தாலியின் நேபொலி நகரில் கடந்த 30 ஆண்டுகளாக வீட்டுப் பணியாளராகக் கடமையாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் இலங்கைக்குச் செல்வதற்குத் தயாரான நிலையில் இருந்தபோது, விபத்துக்கு முகம் கொடுத்து உயிரிழந்துள்ளார்.
கடந்த 24 ஆம் திகதி காலை 6.40 மணியளவிலர் நேபொலி நகரின் போண்டே டெல்லா சனிதா பாலத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. திலக் ரோசா வீதியைக் கடந்து சென்று கொண்டிருந்த ஸ்கூட்டர் ஒன்றின் பகுதி கீழே விழுந்துள்ளது. அதனுடன் பின்னர் வந்த van ஒன்றும் அவர் மீது மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உடனடியாக அவசர மருத்துவ சேவைகள் வந்தபோதிலும், இலங்கையரின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. விபத்திற்குப் பின்னர் அங்கிருந்து தப்பியோடியதாகக் கூறப்படும் ஸ்கூட்டர் ஓட்டுநர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டாவது வாகனத்தின் தொடர்பு குறித்தும் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நீண்ட காலம் இத்தாலியில் பணியாற்றிய நிலையில் இலங்கையில் உள்ள தனது மனைவி மற்றும் மகளுடன் இணைந்து வாழ்வதற்குத் தயாரான நிலையில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.





