Home புதினங்களின் சங்கமம் 4.94 கோடி கொக்கேய்னுடன் கட்டுநாயக்கவில் சிக்கிய 64 வயது தென் கொரியத் தச்சர்! சினிமாப் பாணியில்...

4.94 கோடி கொக்கேய்னுடன் கட்டுநாயக்கவில் சிக்கிய 64 வயது தென் கொரியத் தச்சர்! சினிமாப் பாணியில் நடந்த சம்பவம்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சினிமா படப் பாணியில் நடந்த சம்பவத்தில், 4 கோடியே 94 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ‘கொக்கேய்ன்’ போதைப்பொருளுடன் 64 வயதுடைய தென் கொரிய நாட்டுத் தச்சர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 26 ஆம் திகதி சவூதி அரேபியாவின் தபூக் (Tabuk) நகரிலிருந்து டுபாய் வழியாக இலங்கை வந்தடைந்த இந்த நபர், தனது பயணப் பையைக் காணாமல் ஏமாற்றத்துடன் வெளியேறியிருந்தார். போதைப்பொருள் இருந்த அந்தப் பை, அவர் பயணித்த விமானத்தில் வராமல், பின்னர் வந்த வேறொரு விமானத்திலேயே கட்டுநாயக்கவை வந்தடைந்தது.

காணாமல் போன பையைப் பெற நேற்று (01) பிற்பகல் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அவர் வந்தபோதுதான் காத்திருந்தது அந்த எதிர்பாராத திருப்பம்! பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த மிக இரகசியமான உளவுத்துறைத் தகவலின் அடிப்படையில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகள் சுதாகரித்துக் கொண்டு விரித்த வலையில் அந்த நபர் கச்சிதமாகச் சிக்கினார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments