நீர்வேலி பக்கமாக இருந்து வந்த முச்சக்கரவண்டி கோப்பாய் பிரதேச செயலகத்துக்கு முன்பாக திரும்பிய வேளை பின்னால் வேகமாக வந்த பட்டா ரக வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்று(2) காலை 8.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் முச்சக்கரவண்டி சாரதி காயங்கள் இன்றி தப்பியுள்ளதுடன் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.
விபத்தையடுத்து பட்டா ரக வாகனம் நிற்காமல் தப்பிச் சென்றுள்ளது. இச்சம்வம் குறித்து பொலிஸாருக்கு முறையிடப்பட்டுள்ளது.







