அனலைதீவில் அதிரடி சோதனை – இரண்டு வாள்கள் மீட்பு!
யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனலைதீவு ஆறாம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது, இரண்டு வாள்களுடன் 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரைக் கண்டதும் இளைஞர் ஒரு வாளைக் கிணற்றுக்குள் வீசியதாகவும், பின்னர் அவரைக் கொண்டே கிணற்றுக்குள் இறக்கி அந்த வாளை மீட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





