கனடாவில் விசிட்டர் விசா மற்றும் தற்காலிக விசாக்களில் சென்ற தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்குச் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. கனடாவில் சட்டப்பூர்வ அனுமதி இன்றி அல்லது விசா காலம் முடிவடைந்த பின்னர், தங்கியுள்ள நபர்களின் துல்லியமான எண்ணிக்கையைக் கண்டறியும் நோக்கில் கனடிய அரசாங்கம் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
சட்டப்பூர்வ அந்தஸ்தின்றி வாழ்பவர்களின் எண்ணிக்கை 20,000 முதல் 5 லட்சம் வரை இருக்கலாம் எனத் குடிவரவுத் துறை தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், சட்டவிரோதமாகத் தங்கி இருப்பவர்களைக் கண்டறிந்து அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவலлл்கள் தெரிவிக்கின்றன.





