யாழ் சாவகச்சேரிப் பகுதியில் கணவனின் தந்தையின் தம்பியுடன் 30 வயதான இளம் குடும்பப் பெண் தலைமறைவாகியுள்ளார். 3 வயது, ஒரு வயதான இரு சிறு குழந்தைகளுடன் 33 வயதான கணவன், அவர்களை பராமரிப்பதற்காக தான் வேலை செய்து வந்த தென்பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு வேலைக்குச் செல்லாது தற்போது நிர்கதியான நிலையில் உள்ளார்.
தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் ஊழியராக கடமையாற்றி வந்த கஜேந்தினி தனது கணவனின் சித்தப்பாவான யாழ் நகரில் உள்ள பிரபல வர்த்தக நிலையத்தின் களஞ்சியங்களுக்கான பொறுப்பாளராக உள்ள தர்மரட்ணம் ஜெயசீலனுடன் கடந்த புதன்கிழமை மாயமாகியுள்ளார்.
ஜெயசீலனுக்கு இரு பெண் பிள்ளைகள். அவர்களில் ஒரு பிள்ளை பல்கலைக்கழகத்துக்கு தற்போது தெரிவாகியுள்ளதுடன் மற்றைய பிள்ளையும் ஏஎல் மாணவியாவார்.
அத்துடன் கஜேந்தினியின் கணவனின் தாயார் இறந்து இரு மாதங்களே ஆன நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே கஜேந்தினியின் கணவனின் தந்தை சிலவருடங்களுக்கு முன் இறந்துவிட்டார்.
இந் நிலையில் தென்பகுதியில் உள்ள பிரபல நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் கஜேந்தினியின் கணவர், தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளையும் தனது வீட்டுக்கு அருகில் வசித்து வந்த சித்தப்பாவான ஜெயசீலன் குடும்பத்தின் பொறுப்பிலேயே விட்டு சென்றிருந்ததாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள். அத்துடன் ஜெயசீலனின் மனைவியின் நெருங்கிய உறவுக்கார பெண்ணே கஜேந்தினி என்றும் ஜெயசீலன் குடும்பமே அவளை பேசி மணம் முடித்து வைத்ததாகவும் தெரியவருகின்றது.
இவ்வாறான நேரத்திலேயே கஜேந்தினியும் ஜெயசீலனும் தலைமறைவாகியுள்ளார்கள். தனது இரு பிள்ளைகளுக்குமான உணவை ஜெயசீலனின் மனைவியிடம் கொடுத்து விட்டு அவர்களை அங்கு வழக்கம்போல் ஒப்படைத்துவிட்டு காப்புறுதி நிறுவனத்தி்ற்கு சென்ற கஜேந்தினியும் வேலைக்கு சென்ற தனது கணவனும் இரவாகியும் வராததால் குழம்பிப் போன ஜெயசீலனின் மனைவி, பிள்ளைகள் தேடுதல் நடாத்த தொடங்கிய வேளை தனது மூத்த மகளுக்கு தொலைபேசி மூலம் தொடர்பெடுத்த ஜெயசீலன் ‘தான் கஜேந்தினியுடன் அவசரமாக கஜேந்தினியின் கணவரின் இடத்திற்கு செல்வதாக கூறி தங்களை தேட வேண்டாம் என தெரித்து தொடர்பை துண்டித்துள்ளார்.
இது தொடர்பாக கஜேந்தினியின் கணவரை ஜெயசீலனின் மனைவி தொடர்பு கொண்டு கேட்ட போது தன்னிடம் அவர்கள் வரவே இல்லை என கூறிய பின்னரே இருவரின் லீலைகளும் வெளியானதாக தெரியவருகின்றது.
எனினும் தற்போதும் தனது மூத்த மகளுடன் தொலைபேசி தொடர்பில் இருக்கும் ஜெயசீலன் தன்னை உத்தமன் என்ற நிலையில் கதைத்து வருகின்றாராம்.
கணவனின் நடத்தைகள் பிடிக்காது கஜேந்தினி ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற போது அவளைக் காப்பாற்றி கணவனிடம் தான் கொண்டு சென்றதாகவும் ஆனால் அவனுடன் தான் வாழமாட்டேன் என கூறியதால் தற்போது அவளைப் பாதுகாப்பதற்காக தான் அவளுடன் தங்கியிருப்பதாகவும் விரைவில் கஜேந்தினிக்கு தங்குமிடம் மற்றும் வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுத்த பின் தான் வீடு திரும்புவேன் என மகளுக்கு கூறி வருகின்றாரம் ஜெயசீலன்.
ஜெயசீலன் வீடு திரும்பினால் நன்றாக அவரை கவனித்து கும்பாபிசேகம் செய்வதற்கு ஜெயசீலனின் உறவுகள் ஆயத்தமாக உள்ளதாகத் தெரியவருகின்றது. இதே வேளை கஜேந்தினியின் கணவன் சூதாட்டத்துக்கு அடிமையானவன் எனவும் கஜேந்தினியின் நகைகள் சிலவற்றை இதனால் இழந்து இது தொடர்பாக தம்பதிகளுக்கிடையில் அடிக்கடி மோதல் இடம்பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.





