Home புதினங்களின் சங்கமம் கோழிக் கள்ளனும் அவனது கூட்டாளியும் சேர்ந்து கோழியின் உரிமையாளரை குத்தி கொன்ற குற்றத்திற்காக இருவருக்கும் மரண...

கோழிக் கள்ளனும் அவனது கூட்டாளியும் சேர்ந்து கோழியின் உரிமையாளரை குத்தி கொன்ற குற்றத்திற்காக இருவருக்கும் மரண தண்டனை!! தங்காலையில் நடந்து என்ன?

தங்காலை கோழித் திருட்டு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவரை கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த குற்றத்துக்காக இருவருக்கு தங்காலை மேல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை உறுதி செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தங்காலை மேல் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகளை எதிர்த்து, குற்றவாளிகளான ராஜபுரகே சுகத் வீரரத்ன மற்றும் ராஜமுனிகே நிஹால் சமிந்த ஆகியோரினால் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிபதிகளான ஜனக் டி சில்வா, மேனக விஜயசுந்தர மற்றும் சம்பத் பி. அபேகோன் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட குழு இன்று தீர்ப்பினை வழங்கியது.

விஜேமுனிகே குணவர்தன என்பவர் கிராமவாசி ஒருவரின் கோழியைத் திருடியதாக கூறி அன்றைய நாள் காலையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அன்று மாலை, அவர் தனது வீட்டிற்கு அருகில் தாக்கப்பட்டார்.

முதலாவது குற்றவாளி அவரை கத்தியால் குத்தியபோது, இரண்டாவது குற்றவாளி அவரைப் பிடித்துக் கொண்டிருந்ததாக சம்பவத்தை நேரில் கண்ட பாதிக்கப்பட்டவரின் தந்தை சாட்சியமளித்தார்.

இந்தத் தாக்குதலில் 11 குத்துக்காயங்களுக்கு உள்ளான அவர், சிறிது நேரத்திலேயே உயிரி##ந்தார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments