Home புதினங்களின் சங்கமம் மட்டு’வில் 16 வயது சிறுமியை கடத்திச் சென்று துஸ்பிரயோகம் செய்த 52 வயது காமுகனுக்கு...

மட்டு’வில் 16 வயது சிறுமியை கடத்திச் சென்று துஸ்பிரயோகம் செய்த 52 வயது காமுகனுக்கு 21 வருட கடூழிய சிறை!!

மட்டக்களப்பில் 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 52 வயதுடைய நபருக்கு 21 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாய் நஷ்டஈடும் விதித்து, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி வெள்ளிக்கிழமை (30) தீர்ப்பளித்தார்.

2019 ஆகஸ்ட் 23ஆம் திகதி சட்ட ரீதியான பாதுகாப்பில் இருந்த சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குறித்த நபரை பொலிஸார் கைது செய்து நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தீவிர விசாரணைக்கு பின்னர் 2023இல் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு குறித்த வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வந்தது.

இந்நிலையில் சந்தேக நபர் குற்றவாளியாக கடந்த 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதையடுத்து, தண்டனைத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

அதன்படி, குறித்த நபரின் முதலாவது குற்றமான, சட்ட ரீதியான பாதுகாப்பில் இருந்த சிறுமியை கடத்திச் சென்றமைக்காக தண்டனைச் சட்டக் கோவை 354இன் கீழ் ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இரண்டாவது குற்றமான பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்காக, தண்டனை சட்டக்கோவை 345இன் கீழ் விடுவித்ததோடு மூன்றாவது குற்றமான பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தண்டனை சட்டக்கோவை 364இன் கீழ் 20 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நஷ்ட ஈடாக ஒரு இலட்சம் ரூபாவை செலுத்துமாறும் அதை செலுத்தத் தவறினால் 2 வருட சாதாரண சிறைத்தண்டனையும் இந்த இரு குற்றங்களுக்கான கடூழிய சிறைத் தண்டனையை ஒன்றின் பின் ஒன்றாக 21 வருடங்கள் செயல்படுத்துமாறும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments